நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படித்த கவுசல்யா என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு பாராட்டு விழா நடத்த பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்தப்பாராட்டு விழாவில் பள்ளியின் செயலாளர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தலைமையாசிரியர் சுந்தரராஜன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவி கவுசல்யாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராணி மதுராந்தகி மாணவி கவுசல்யா மருத்துவ படிப்பை முடிப்பதற்கான அனைத்து வசதிகளையும் தான் கொடுப்பதாக கூறியுள்ளார்.