உரிய ஆவணம் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாசில்தார் ராஜரத்தினம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்களை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து திருப்புவனம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.