கரடிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வன பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய கரடி கூக்கல் பகுதிக்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கரடிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சாலைகளில் உலா வரும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.