Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு…. அண்ணா பல்கலை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் கொரோனா 3-ம் அலை தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் அறிவிப்பின்படி நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வானது நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையிலும், மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் வரை காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளுக்கான அட்டவணையில் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

இதையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதிய வினாத்தாள்களை மின்னஞ்சல் அல்லது கொரியர் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். இதனிடையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அன்று நடைபெற உள்ள தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்க அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு மாறாக, ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |