ஓடும் ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தாயிபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருந்து ஆட்டோவில் கம்பரசர் மோட்டார்களை ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சுதாகர் ஆட்டோவை விட்டு கீழே இறங்கி பார்த்த போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனையடுத்து ஆட்டோவில் தீ மளமளவென பற்றி எரிந்ததால் சுதாகர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆட்டோவில் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அவினாசிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.