ஒமிக்ரானின் புதிய துணை வகை மாறுபாடான BA.2 தற்போது வரை 57 நாடுகளில் பரவியுள்ளதாக நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் உலக சுகாதார அமைப்பு இந்த BA.2 மாறுபாடு பற்றிய தகவல் குறைந்த அளவே கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய மாறுபாடு அடைந்த BA.2, ஒமிக்ரானை போல் குறைந்த நோய் தன்மையை கொண்டுள்ளதா ? என்பதை இன்னும் நிபுணர்களால் உறுதிப்படுத்தி சொல்ல முடியவில்லை.
அதோடு மட்டுமில்லாமல் பிஏ.2 பல்வேறு முறை உருமாற்றங்கள் அடைகிறது. மேலும் ஸ்பைக் புரோட்டீனிலும் மாற்றம் ஏற்பட்டு BA.2 மனித செல்களில் எளிதாக நுழைந்து விடுகிறது. எனவே ஆய்வாளர்கள் 4 புதிய வேரியண்ட்டுகளில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.