ரயில் நிலையத்தில் குடிபோதையில் போலிஸ் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட போலீசாரை ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.விசாரணையில் அவரின் பெயர் சபரிக்குமார் என்பதும் அவரின் வயது 28 என்பதும் தெரியவந்தது .
இவர் பெரியமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சபரிக்குமாரின் மீது குற்றப்பிரிவு போலீஸிலில் புகார் அளிதுத்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு. அதன்பேரில் அவரின் மீது இலாகா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.