Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அலைகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கியது. இதனை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் வீட்டில் எருந்தே திருப்புதல் தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்த சமயத்தில் அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வந்ததை அடுத்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ஆம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு தொடந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் 3ம் பருவ பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற தேர்தலையொட்டி மேலும் 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

Categories

Tech |