Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஓமிக்ரானை மிஞ்சும் “பிஏ-2″…. பாதிக்கப்பட்டவங்க தான் மிகப்பெரிய ஆபத்து…. தப்பிக்க வழி சொன்ன ஆய்வாளர்கள்….!!

இந்தியா உள்ளிட்ட 35க்கும் மேலான நாடுகளில் பரவி வரும் பிஏ2 வைரஸ் இனிவரும் காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாடான பிஏ 2 இந்தியா உள்ளிட்ட 35 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது ஓமிக்ரானின் புதிய மாறுபாடான பிஏ 2 வைரஸ் இனிவரும் காலங்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்த கூடிய தன்மையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த பிஏ 2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 39 சதவீதம் அதிகமாக மற்றவர்களுக்கு நோயை பரப்பக்கூடிய தன்மையில் இருப்பார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு சிறந்த வழியாக பூஸ்டர் தடுப்பூசிகளை தொடர்ந்து நாம் செலுத்தி கொள்வதே இத்தொற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |