Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணி இடமாற்றம் செய்ய வேண்டும்…. கூட்டுறவு சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு ….!!

சார் பதிவாளரை பணி இடமாற்றம் செய்யக்கோரி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உ ள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாநிலச் செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையான்குடி கூட்டுறவு சார்பதிவாளரை  இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் நடராஜன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆசிரிய தேவன், மாவட்ட தலைவர் போஸ், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் பரமானந்தம், செந்தில்குமார், இணைச்செயலாளர் காளீஸ்வரி, போராட்டக் குழு தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |