கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் கிராமத்தில் வீரகாளை – கவிதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சித்தாலங்குடி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து வீரகாளையின் கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரகாளை மற்றும் கவிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 51 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரகாளை கவிதா ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.