Categories
உலக செய்திகள்

கட்சி நிதியில் முறைக்கேடு… பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு அதிகரிக்கும் நெருக்கடி…!!!

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெறக்கூடிய வெளிநாட்டு நிதியின்  ஆவணங்களை சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின், ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி’-க்கு  கிடைக்கக்கூடிய வெளிநாட்டு நிதியை குறைவாக காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து பாபர் என்ற நபர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்.

மேலும், அந்த கட்சி, சரியான ஆவணங்களை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமானது, தங்களது செயலாளர்களிடம், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் வெளிநாட்டு நிதி குறித்த ஆவணங்களை சரியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |