Categories
சினிமா

“என்ன சார் குழப்புறீங்க?”…. அமீருடன் இணையப்போகும் வெற்றிமாறன்…. அப்போ அந்த படம்…?

இயக்குனர்கள் வெற்றிமாறனும் அமீரும் வடசென்னை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைத்தார்.

இத்திரைப்படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் அசுரன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் இரண்டாம் முறை தேசிய விருதை பெற்றார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து, விடுதலை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வெற்றிமாறன், அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால், தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது இயக்குனர் அமீருடன் சேர்ந்து வெற்றிமாறன் பணியாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது வெளியான தகவல் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |