மணல் கடத்திய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் சரக்கு ஆட்டோவில் வந்த 2 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் அவர்கள் திலகர் மற்றும் லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் லட்சுமணன் வீட்டின் பின்புறத்திலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திலகர் மற்றும் லட்சுமணன் ஆகியோரை கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.