ஊரக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மண்மலை ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஊரக சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இவற்றிற்கு மாவட்ட கவுன்சிலர் அகிலா பானு, அருள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று திரும்பவும் பள்ளி வளாகத்தை வந்தடைந்துள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகி அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.