Categories
உலக செய்திகள்

பகீர் சம்பவம்: “நொடிப்பொழுதில்”… சுதாரித்த விமானி…. எல்லாத்துக்கும் காரணம் “இதான்”…. வைரலாகும் வீடியோ….!!

வட ஐரோப்பாவில் நிலவிவரும் மாலிக் புயல் காரணமாக வீசும் அதிவேக காற்றினால் விமானத்தை சரியாக தரையிறக்க முடியாமல் விமானி திணறிய சம்பவம் தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட ஐரோப்பாவில் நிலவிவரும் மாலிக் புயலினால் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும்போது பலத்த காற்றினால் ஒரு பக்க டயர் மட்டும் ரன்வேயை தொட்டுள்ளது.

இதனால் விமானியினால் சரியாக விமானத்தை தரையிறக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலைமையில் சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் அதனை இயக்கியுள்ளார்.

அதன் பின்பு ஒரு வழியாக விமானி விமானத்தை சரியாக தரையிறக்கிய சம்பவம் தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |