தேர்தலை முன்னிட்டு 2 பறக்கும் படைகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் கல்வராயன்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா மற்றும் மண்டல தாசில்தார் மனோஜ் முனியன் ஆகியோர் தலைமையில் இரண்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வாகன சோதனை நடத்தியுள்ளனர். இதில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் எதுவும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை. மேலும் இதேபோல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார் மியாட் மற்றும் ஏழுமலை ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.