Categories
மாநில செய்திகள்

நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…. 63,000 போலீசார் குவிப்பு..!!

தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை  (27)  மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமான நாளை மட்டும் 91 ஆயிரம் ஊரக – உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 மேலும் தேர்தல் நேரத்தில் எந்த வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, காவல்துறை சார்பில், சுமார் 48,579 காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல்துறை நண்பன் திட்டத்தில் பணியாற்றும் 14,500 பேர் என மொத்தமாக 63 ஆயிரத்து 79 பேர் இந்த உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்தப் பாதுகாப்புத் தொடரும் எனவும் காவல்துறை இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |