Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. 17 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலை, மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை, மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 11 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 430 புகையிலை பாக்கெட்டுகள், 68 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |