Categories
தேசிய செய்திகள்

நான் கொல்லவில்லை… பிசாசுகள் கொன்றுவிட்டது… நாடகமாடிய கணவன் கைது..!!

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.

இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹீனாவின் கணவர் முன்ஷீப்பிடம் விசாரித்தபோது அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அவரது வீட்டின் முற்றத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க முயற்சித்தபோது பூதம் ஹீனாவை தாக்கிவிட்டது என்றும் கூறினார். இதனை நம்பாத போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் உண்மையை ஒப்பு கொண்டார். மேலும் இதுதொடர்பாக   காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |