ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல்கள் வந்துசேரும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இன்று முழு யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு கொஞ்சம் ஏற்படலாம். எனவே கவனமாக பேசுவது சிறப்பு.
நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அதேபோல செய்கின்ற காரியங்களில் ரொம்ப கவனமாக செய்யுங்கள். இன்று கூடுதல் கவனம் தான் உங்களை சரியான முறையில் வழிநடத்திச் செல்லும். இன்று பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளை மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தயவுசெய்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருங்கள். உங்களுக்கான நல்ல பலன்கள் அனைத்துமே கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்