இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் அழகுமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு உடல்நலக்குறைவால் அழகுமுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கைக்குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கவிதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து கவிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.