Categories
சினிமா

பிக்பாக்ஸ் அல்டிமேட்…. “ஒரே பதிலில் வனிதாவை கம்முனு உக்காரவச்ச அபிராபி”…. வெளியான சூப்பர் ப்ரோமோ…!!!

“பிக்பாக்ஸ் அல்டிமேட்”  ப்ரோமோ வெளியாகிய நிலையில் இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாக்ஸ் அல்டிமேட்டில் இன்று பத்திரிக்கையாளர்கள்-பிரமுகர்களை பேட்டி எடுப்பது போல டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தாடி பாலாஜி பிரபலமாக அமர பாலாஜி முருகதாஸ் பத்திரிக்கையாளராக கேள்வி கேட்டார். அதற்கு பாலாஜியை பதிலளிக்க விடாமல் அபிராமி பதில் கூறினார்.

அபிராமி பேச்சுக்கு எதிர்மறையாக வனிதா பேசுகிறார். அபிராமி-வனிதா இடையே வாக்குவாதம் நடக்கிறது. அபிராமி கூறிய ஒரே பதிலில் வனிதா அமைதியாக உட்கார்ந்து கொள்கிறார்.அவர் கூறியதாவது, பாலாஜி பேசினால் போதும் அவருக்கு ஜால்ரா போடாதீங்க என்று அபிராமி வனிதாவை பார்த்து கூறுகிறார். இதைவைத்து பிரோமோவில் “பிக்பாக்ஸ் அல்டிமேட்” சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |