Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த என்ஜின்…. சேதமடைந்த இருசக்கர வாகனங்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடுவனூர் பகுதியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளது. அப்போது சிறுவள்ளூர் அருகாமையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்த என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் என்ஜினுக்கு அடியில் சிக்கி சேதமடைந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

Categories

Tech |