Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் சிக்கிய 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….

கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுகொண்டு உள்ளே மாட்டிகொண்ட 2 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உள்ள சடையால் கோவில் தெருவில் ராம் பரத் என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், சர்வேஸ்வரன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பரத் வழக்கம்போல வேலைக்கு சென்ற நிலையில் சரண்யாவும் வீட்டிற்கு பின்புறம் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சர்வேஸ்வரன் திடீரென கதவை அடைத்து உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டுள்ளான். இதனையடுத்து வேலைகளை முடித்துவிட்டு சரண்யா வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டி இருப்பது தெரியவந்துள்ளது இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறக்க முயற்சி செய்தார்.

மேலும் 1 மணிநேரம் ஆகியும் கதவை திறக்க முடியாததால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கான உபகரணங்களை கொண்டு கதவை திறந்தனர். இதனையடுத்து சிறுவன் சர்வேஸ்வரனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |