மனைவியை மிரட்டிய வங்கி மேலாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணி நகர் பகுதியில் பிரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிளாரன்ஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளாரன்ஸ் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து பிரவின்குமார் விவகாரத்து கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அப்போது நாகப்பட்டினம் கோர்டில் 2 பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனால் பிளாரன்ஸ் விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு நகலுடன் வந்துள்ளார். அப்போது வங்கி மேலாளர் பிரவின்குமார் பிளாரன்சை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிளாரன்ஸ் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரவின்குமாரை விசாரணை நடத்தி வருகின்றனர்.