மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள் ஆக இருக்கும். பொருளாதாரத்தை நீங்கள் உயர்த்துவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.அதுமட்டுமில்லாமல் இன்று வீடு வாகனம் வாங்க கூடிய தனயோகம் இருக்கும். செல்வ யோகமும் இன்று கூடும். வீண் அலைச்சல் மட்டும் கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மனம் தேவையில்லாத விஷயத்திற்காக சங்கடப்படகூடும்.
எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மட்டும் நல்லது. வீண் பகை வராமலும், உடல் ஆரோக்கியம் கெடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது நிதானம் இருக்கட்டும். தயவுசெய்து இன்று நீங்கள் யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்காதீர்கள். அதுமட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும்.
இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதுமே எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு வாரம் வாரம் பழகிக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்