சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பகை விலகி பாசம் கூடும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் இருக்கும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை கடன்கள் மட்டும் இன்று வாங்க வேண்டாம். இன்று முயற்சியின் பேரில் சில முக்கியமான பணிகள் நிறைவேறும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்