கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உங்களை நிழல் போல பின்தொடர்ந்த கடன் சுமை குறையும். இன்று வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது மட்டும் நல்லது. சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பும் உண்டாகும். காயங்களில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும்.
அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது மட்டும் நல்லது. கூடுமானவரை உங்கள் சிந்தனையை இன்று நீங்கள் ஒருநிலைப்படுத்துங்கள். மாணவ செல்வங்கள் கொஞ்சம் கல்வியில் முயற்சியின் பேரில் படியுங்கள். ஆசிரியர்கள் செல்வதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ளுங்கள். சக மாணவவரிடம் எந்தவித பிரச்சினையும் வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்