ரவுடியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பிரபல ரவுடியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரகுபதி தனது நண்பர் வினோத்குமாருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பயணி ஒருவரின் மணிபர்சை திருடிவிட்டு ரகுபதி அங்கிருந்து தப்பி சென்றார்.
அப்போது வினோத்குமாரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்துவிட்டனர். அதன்பின் பொது மக்களிடம் மாட்டி விட்டு தப்பி ஓடிய ரகுபதியிடம் வினோத்குமார் சண்டை போட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த ரகுபதி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.