Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “புதிய முயற்சியில் வெற்றி”… சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். மாற்று இனத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுங்கள். போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள்.

எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பண தேவைகள் உண்டாகும். அதற்காக நீங்கள் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. அன்பாகவே இருப்பீர்கள். மனைவியிடம் அன்யோன்யமாகவே இருப்பீர்கள். இன்று மாணவர்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கடுமையாகவே உழையுங்கள். படித்ததை தயவுசெய்து எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |