Categories
சினிமா தமிழ் சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்…. “சிவகார்த்திகேயன்-சூரிக்கு பதிலாக” முதலில் யார் நடித்தது தெரியுமா?….!!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  முதலில் ஜீவா -சந்தானம் தான்  நடிக்க இருந்தார்கள் பின்னர்தான் சிவகார்த்திகேயன்-சூரி நடித்தார்கள்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் போஸ்பாண்டியாகவும், சூரி கோடியாகவும் ஸ்ரீதிவ்யா லதா பாண்டியாகவும் நடித்திருந்தனர். கிராமச் சூழலில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கும் சூரிக்கும் முக்கியமான திரைப்படமாகும். சிவகார்த்திகேயனும் சூரியும் சேர்ந்தாலே காமெடிக்கு பஞ்சமில்லை. படம் சீரியஸாகப் போகும் பொழுதிலும் இவர்கள் இருவருமே கவுண்டர் போட்டு அனைவரையும் சிரிக்க வைத்தனர். இப்படத்தை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் காமெடிபடம்.

இத்திரைப்படத்தில் முதன்முதலாக ஜீவாவும் சந்தானமும் தான் நடித்தார்கள். சில காரணங்களால் நடிக்க முடியாததால் சிவகார்த்திகேயனும் சூரியும் இப்படத்தில் நடித்தார்கள். “சிவா மனசுல சக்தி”, “என்றென்றும் புன்னகை” உள்ளிட்ட படங்களில் ஜீவா மற்றும் சந்தானத்தின் நகைச்சுவை நன்றாக இருந்தாலும் கிராமத்து படத்தில் இவர்களது நடிப்பு நன்றாக இருந்திருக்குமோ? என்ற ஐயம் ஏற்படத்தான் செய்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தொடர்ந்து இவர்களின் காம்போ நம்ம வீட்டு பிள்ளை, ரஜினிமுருகன்,கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்கள் உருவாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர்கள் சேர்ந்து நடிக்கும் நகைச்சுவை படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |