Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்”… ஆன்மீக நாட்டம் இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாளாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். கடன் தொல்லை கொஞ்சம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

வேற்று மொழி பேசுவோரின் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். இன்று கூடுமானவரை நீங்கள் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதே போல புதிய முயற்சிகள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து தள்ளிப்போடுங்கள், பார்த்துக்கொள்ளலாம். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |