Categories
அரசியல் மாநில செய்திகள்

ரிஜெக்ட் பண்ணிட்டீங்க தானே…! 87 நாளில் எல்லாம் நடந்துருக்கு…. OK சொன்ன குடியரசு தலைவர்…!

நீட் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து , முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பாக கூட்டப்பட்டு இருக்கின்ற இந்த இரண்டாவது கூட்டத்திற்கு எங்களுடைய அழைப்பை ஏற்று வந்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கின்றோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதை ஒட்டித்தான் ஒற்றுமையாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து நாம் எடுத்துக் கொண்டு வருகின்றோம்.

நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம் தான் நம்முடைய தமிழ்நாடு. 2006இல் இதற்காக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து,  அந்த கமிட்டியின் மூலமாக ஒரு அறிக்கையை பெற்று,

நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நம்முடைய சட்டமன்றத்தில் கொண்டுவந்து நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அது குறித்து சற்று விவரமாக நாம் கூற வேண்டுமென்றால்,  டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் 7.7.2006 அன்று ஒரு கமிட்டி அமைத்தோம், 13.11.2006 அன்று அறிக்கை பெற்றோம்.

6.12. 2006 அன்று சட்டமன்றத்தில் அதற்கான சட்ட முன்வடிவை நிறைவேற்றினோம். அந்த சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 3.3.2007 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதாவது 87  நாட்களில் ஆளுநரும்,  குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து,

தமிழ்நாட்டில்  பொறியியல் – மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இப்படி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன்பு ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இருக்கக் கூடிய உயர்கல்வித்துறை 15.2.2007  அன்று தமிழக சட்டமுன்வடிவை ஏற்கலாம் என்று ஒப்புதல் வழங்கியது என கடந்த கால விஷயங்களை நினைவு கூர்ந்தார்.

Categories

Tech |