Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும்”.. துணிச்சல் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் உருவாகலாம். இன்று பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டு பயணம் ஏற்படும். லாபம் இன்று ஓரளவு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படலாம்.

இதனால் உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும்  தெய்வத்திற்காக இன்று சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று மாணவ செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். கல்வியில் ஆர்வம் இன்று அதிகமாகவே காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |