அமிதாப் பச்சனுடன் கடந்த 2005-ஆம் ஆண்டில் வெளியான “விருத்” என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் அமிதாப் தயாள் சினிமாத்துறையில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமாக பயணித்து வந்தார். மேலும் இவர் ரங்தரி, லைப் ஆன் தி எட்ஜ், துஹான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தனது 51-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அதாவது கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அமிதாப் தயாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அமிதாப் தயாளின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.