ஐஸ்வர்யாவின் தாயான லதா அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு தனுஷுக்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியர்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து 2 பிள்ளைகளையும் பெற்றுள்ளார்கள். ஆனால் திடீரென தற்போது இருவரும் பிரிந்துவிட போவதாக அறிவித்துள்ளதால் ஐஸ்வர்யாவின் தந்தையான ரஜினி மிகுந்த கவலையிலுள்ளார். இதனால் ஐஸ்வர்யாவின் மனதில் மீண்டும் தனுஷுடன் இணைந்து விடுவோம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனால் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சேரவே கூடாது என்ற முடிவோடு உள்ளார்.
இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்காக தனுஷ் அதிகப் படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தாயான லதா தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தனுஷிற்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் கையிலிருக்கும் படவாய்ப்புகள் நழுவுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.