Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “பல நாள் ஆசை நிறைவேறும்”.. பணத்திற்கு பொறுப்பேற்காதீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. பல நாள் ஆசை இன்று உங்களுக்கு நிறைவேறக் கூடிய சூழல் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருக்கட்டும். அதேபோல நண்பரிடம் பேசும்பொழுது ரொம்ப எச்சரிக்கையாக பேசுங்கள். நிலுவைப்பணம் இன்று உங்களுக்கு வசூலாகும். உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தப் பிரச்சினையும் இல்லை, நல்லபடியாக இருக்கும்.

அதே போல முக்கியமான விஷயத்தை நீங்கள் உங்கள் வீட்டு பெரியோரிடம் கேட்டு செய்யுங்கள். அவரது  ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். காரியங்களில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். அடுத்தவருக்காக எந்த பொறுப்பையும் ஏற்காதீர்கள். அதேபோல பணத்திற்கு பொறுப்பேற்காதீர்கள். அதுநண்பனுக்கு பணம் வாங்கிக் கொடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது உறவினர்களுக்கு பணம் வாங்கிக் கொடுப்பதாக இருந்தாலும் சரி நீங்கள் பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களை படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை  அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |