Categories
அரசியல்

“ஆண்டவனால கூட அதிமுகவை காப்பாத்த முடியாது!”…. முக்கிய பிரபலம் எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து விலகி விவசாயம், ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது அரசியல் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூங்குன்றன், பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் வெளியிட்ட பதிவு ஒன்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதாவது “அந்த ஆண்டவன் கழகம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறான். அதனால் தான் பல காரணங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கிறான். ஆனால் அதனை பயன்படுத்திக்கொள்ள நீங்க தயாரா ? இவற்றை பயன்படுத்திக் கொள்ள தயாராக இல்லை என்றால் ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது. பேரூராட்சி, நகராட்சி, செயலாளர்கள் கழக ஆட்சியில் பயன் அடைந்தார்களா ? என்பது உங்களுக்கு தான் தெரியும்.

எனக்கு தெரிந்தவரை அவர்கள் பலன் அடையவில்லை. எனவே மாநகராட்சி, நகர, பேரூராட்சிக்கு தேவையான உதவியை கழகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சி அடைந்தவர்கள் அவர்களுக்கு உதவ வலியுறுத்த வேண்டும்” என்று பதிவில் கேட்டுக்கொண்டார். அதேபோல் கழக வேட்பாளர்களுக்கு இதய தெய்வங்களின் ஆசி தேர்தலில் போட்டியிட துணை நிற்கும். எனவே அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |