Categories
அரசியல்

“நோட்டாவை விட கம்மியா ஓட்டு வாங்குற ஒரு கட்சி”…. கலாய்த்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

நேற்று முன்தினம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம் அனைவரும் நலமா ?இன்னும் கொஞ்ச நாட்கள் தான் தேர்தலுக்கு உள்ளது. இந்த வீடியோ மூலம் சில விஷயங்களை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மனதில் பட்டதை இப்போது வெளிப்படையாக பேச போகிறேன். இது பாசிச சக்திகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் நடக்கிற ஒரு யுத்தம்.

தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழ்நாட்டில் நோட்டாவை விட கம்மியாக ஓட்டு வாங்குகிற ஒரு கட்சி மொத்தமாக பறித்துக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அனைத்தும் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். மாநில உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும். தவறு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் தண்டனை வழங்கப்படும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

எதிர்க்கட்சியினர் இந்து மதத்திற்கு எதிரானது தான் திமுக என்ற பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். எனவே நான் தெளிவாக சொல்கிறேன். திமுக ஆட்சியில் பாரபட்சமில்லாமல் அனைத்து மத மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைவருடைய மத நம்பிக்கைகளும் மதிக்கப்படும். சமத்துவம், சமூக நீதி பாதுகாக்கப்படும்.

ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சி தான் என்னுடைய முதன்மையான நோக்கம். என்னுடைய சுயநலம் கருதி நான் யாருடைய காலிலும் சென்று விழ மாட்டேன். அதேபோல் சுயநலம் கருதி தமிழ் மக்களுடைய உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இதெல்லாம் என்னுடைய மனப்பூர்வமான உறுதிமொழிகள். இதனை மீறி நான் நடந்தால் என்னை நீங்கள் நேரடியாகவே கேள்வி கேட்கலாம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |