Categories
தேசிய செய்திகள்

சிவன் கோவிலில் இப்படியொரு அதிசயமா?… ஓடோடி போகும் பக்தர்கள்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

புதுச்சேரி அருகேயுள்ள சின்ன கோட்டகுப்பம் பகுதியில் பார்வதி உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சிவலிங்கமானது மத்திய பிரதேசத்திலுள்ள நர்மதா நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

அப்போது பூஜையில் பல்வேறு பூக்கள், மரிக்கொழுந்து மருவு உள்ளிட்ட வாசனை இலைகளை லிங்கத்தின் தலையில் வைப்பது வழக்கம் ஆகும். இவ்வாறு வைக்கப்படும் பூக்கள் மற்றும் இலைகள் ஒரு பிரதோஷ தினத்தில் இருந்து அடுத்த பிரதோஷ தினம் வரும் வரை வாடாமல் துளிர்விட்டு வளரும் அதிசய நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறியபோது, “இந்த சிவலிங்கத்திலிருந்து வெளிப்படும் குளிர்ச்சித்தன்மை பூக்களை வாடாமல் வைத்துள்ளது” என்று கூறியுள்ளனர். பூக்கள் வாடாமல் சிவலிங்கத்தின் மீது உள்ளதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |