Categories
உலக செய்திகள்

என்னது..! இவரைப் போல் தோற்றம் கொண்ட இன்னொருவரா… யார் என்று தெரியுமா…??

இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை போல தோற்றம் ஏற்படுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக அவர்மீது புகார் கூறப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்சன் போல் தோற்றம் கொண்டவர் ஃபேபியோ ஜாக்சன். 28 வயதான இந்த இளைஞர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். இவரது நடை, உடை பாவனைகள் அனைத்தும் மைக்கேல் ஜாக்சனை போல் உள்ளதால் ஃபேபியோவுக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தனது 11 வயதில் இருந்தே தான் மைக்கேல் ஜாக்சனை போல் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அவரைப் போல் தோற்றம் ஏற்படுவதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஒன்றை  ஃபேபியோ செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |