Categories
சினிமா தமிழ் சினிமா

தாமரை செல்விக்கு பரிசளித்த வருண்…. அப்படி என்ன கொடுத்தாரு….? நீங்களே பாருங்க….!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபலமானவர் தாமரை அவருக்கு அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் பரிசளித்துள்ளார். 

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் அனைவரும்  பார்க்கும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் மக்களிடம் பெரிதும் அறிமுகம் இல்லாதவர் தாமரைச் செல்வி. இவர் கூத்துக்கள், நாடகங்கள் போன்றவற்றை நடத்தி தனது வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வாய்ப்பாக கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் கடினமாக விளையாடினார். அதே அளவிற்கு சண்டைகளையும் போட்டு வந்தார். பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியில் கலந்து கொண்டு கேஸ் ஸ்டவ் வெற்றிப் பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதே போலவே நிறைய பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதையடுத்து தாமரைச்செல்வி எழிமினேஷனுக்கு பிறகு வெளியே சென்றதும் அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர் வருண், தாமரை செல்விக்கு பிரிட்ஜ், மைகிறோ ஓவன் போன்றவை வாங்கி கொடுத்துள்ளார். அதைப்பற்றி தாமரைச் செல்வி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Categories

Tech |