தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யலாமா..? என்பது தொடர்பாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டி இருப்பதால், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு ஆல்பாஸ் வழங்கலாமா அல்லது மாவட்ட அளவில் மதிப்பீட்டுத் தேர்வு மட்டும் நடத்தலாமா என்று ஆலோசித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயர்கல்வியில் மாணவர்கள் திணறும் நிலை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.