கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவரான தேவசித்து வசித்து என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கிரேசியம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எனிமா ஜாக்லின், பிராங்குலின் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் எனிமா ஜாக்குலின் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த 31-ஆம் தேதி எனிமா ஜாக்குலின் தனது தாயிடம் பசிக்கிறது ஏதாவது சமைத்து கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு நூடுல்ஸ் சமைத்து சாப்பிடு என கிரேசியம்மா கூறியுள்ளார். இதனால் நூடுல்ஸ் சமைத்துக்கொண்டே எனிமா ஜாக்குலின் ஒரு கேரட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து தனக்கு வயிறு வலிப்பதாக எனிமா ஜாக்குலின் கிரேசியம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது சமையல் அறையில் இருந்த 3 கேரட்டுகளில் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக எனிமா ஜாக்குலின் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எலி தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக விஷ மருந்து தடவிய கேரட்டை தனது மகள் சாப்பிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த கிரேசியம்மா உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி எனிமா ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.