ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் நாட்டிற்கு உதவியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3000 வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க அரசு தீர்மானித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகே சுமார் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்ய அரசு, நிறுத்தியிருக்கிறது. இதனால் அங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் வில்செக்கை தளமாக உடைய சுமார் ஆயிரம் வீரர்களை உடைய ஸ்ட்ரைக்கர் படைப் பிரிவானது, ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
இதேபோல், கரோலினாவின் ஃபோர்ட் பார்க்கிலிருந்து, போலந்து நாட்டிற்கு சுமார் 1700 வீரர்கள் அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 300 வீரர்கள் ஃபோர்ட் பார்க்கிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்படுவர் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.