அடுத்த வருடத்தில் இருந்து வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தில் “கிரிப்டோகரன்சி” எனும் மெய்நிகர் நாணய வருமானத்துக்கு என்று தனியாக ஒரு பகுதி கொடுக்கப்படும் என மத்திய வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 2022 பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வருவாய்க்கு, 30 சதவீத வரி மற்றும் கூடுதல் வரி விதிக்கப்பட இருப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து குதிரை பந்தயம் லாட்டரி, புதிர் போட்டிகள் ஆகியவைகளில் வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வரி விதிப்பது போன்றே, இனி கிரிப்டோகரன்சி வருவாயும் கருதப்பட்டு வரி விதிக்கப்படும். இந்த நிலையில் இந்த கிரிப்டோகரன்சி வருமானத்திற்கு என்று தனியாக ஒரு பகுதி, வருமான வரி தாக்கலுக்கான படிவத்தில் இடம் பெறும் என்று தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். இதனிடையில் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. எனினும் இதுவரையிலும் அது தொடர்பான எந்த வரைவும் இன்னும் வெளியிடப்படவில்லை.