Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு தாமதம்… கொள்ளிடத்தில் கொதித்தெழுந்த மக்கள்..!!

Image result for அடையாள மை
இதையடுத்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தேர்தல் பணியாளர்களிடம் கடுமையான    வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தேர்தல் அதிகாரிகள்  வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை இல்லை என்றும்  மைபாட்டில் எடுத்துவரும்வரை காத்திருக்கும்படி எடுத்து  கூறியுள்ளார்.  பொதுமக்கள்  இதனை கேட்டு  தேர்தல் அதிகாரியிடம் மீண்டும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர் இதன் காரணமாக  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மிகவும் சிரம பட்டு பொதுமக்களை சமாதானப்படுத்திஉள்ளனர் . பின்னர் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு  அதிகமாக  வைக்கப்பட்டிருந்த மை பாட்டிலை கொண்டுவந்தனர். அதனை தொடர்ந்து எடமணல் ஊராட்சியில்  வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சம்பவத்தின் காரணமாக   எடமணல் ஊராட்சியில் சுமார்  7 மணி அளவில்  தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு சுமார் 1  மணி நேரம் காலதாமதமாக 8 மணிக்கு தொடங்கியது.

Categories

Tech |