Categories
தேசிய செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ திடீர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!!

முஸ்லீம் லீக் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ யூனுஸ் குஞ்சு தனது 80-வது வயதில் காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி- தரிபா பீவி, 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். யூனுஸ் குஞ்சு 1991ல் கேரள மாநிலம் மலபுரத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இரவிபுரம் மற்றும் புனலூர் தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வியை சந்தித்தார்.

அதுமட்டுமல்லாமல் அவர் முஸ்லீம் லீக் மாநிலச் செயலர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், ஐயுஎம்எல் கொல்லம் மாவட்டத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும், வடக்கேவிலா கிராம பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சில் உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். அவரது உடல் கொல்லூர்விளை ஜும்ஆ மசூதி கப்ரஸ்தானில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |