Categories
தேசிய செய்திகள்

கார்பன் மோனாக்சைடை சுவாசித்த 13 வயது சிறுமி…. நொடியில் நடந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள துவாரகாவில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறையினர் அறிக்கையின்படி, குளியலறையில் உள்ள ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதற்கிடையில் குளியலறையில் குளிப்பதற்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார்.  இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சிறுமி மயக்கமான நிலையில் கிடந்துள்ளார்.

அதன்பின் சிறுமியை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 7- ம் வகுப்பு படிக்கும் தனது மகள், ஆன்லைன் வகுப்பு முடிந்து பிற்பகல் 2.30 மணிக்கு குளிக்க குளியலறைக்குச் சென்றதாகவும், 1 மணி நேரம் கழித்தே மகளை மயக்க நிலையில் மீட்டதாகவும் தந்தை கூறியுள்ளார். குளியலறையில் உள்ள தண்ணீரை சூடாக்கும் கருவியில் இருந்து கசிந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |